கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி + "||" + 2nd ODI against New Zealand India win by 7 wickets

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது.
ஆக்லாந்து,

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசியது. கடந்த போட்டியை போல ரன்களை வாரி வழங்காமல், இன்றைய போட்டியில், இந்திய பந்து வீச்சாளர்கள் சுதாரிப்புடன் பந்து வீசினர். முதல் ஆட்டத்தில் மிரட்டிய நியூசிலாந்து துவக்க வீரர் செய்பர்ட் 12 ரன்களில் புவனேஷ்குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கோலின் முன்ரோ (12 ரன்கள்), கேப்டன் வில்லியம்சன் (20 ரன்கள்) , மிட்செல் ( 1 ரன்), என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ் டெய்லர் 42 ரன்களில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். 4 சிக்சர்களை பறக்க விட்டு அதிரடி காட்டிய  கிரான்ட்ஹோம் (50 ரன்கள், 28 பந்துகள்) ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி 159 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கேப்டன் ரோகித் சர்மா 50 ரன்களும், ஷிகர் தவான் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 18.5 ஒவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது. ரிஷப் பாண்ட் 40 ரன்களும், விஜய் சங்கர் 14 ரன்களும், எம்.எஸ் டோனி 20 ரன்களும் எடுத்தனர்.