கிரிக்கெட்

நியூசிலாந்து விக்கெட் கீப்பரை ஏமாற்றிய டோனி -வைரலாகும் வீடியோ + "||" + New Zealand wicketkeeper Cheated by dhoni Vairalakum Video

நியூசிலாந்து விக்கெட் கீப்பரை ஏமாற்றிய டோனி -வைரலாகும் வீடியோ

நியூசிலாந்து விக்கெட் கீப்பரை ஏமாற்றிய டோனி -வைரலாகும் வீடியோ
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது, விக்கெட் கீப்பரை ஏமாற்றுவது போன்று டோனி விளையாடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரை வென்று தற்போது 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி பரிதாபமான தோல்வியை தழுவியிருந்தது.

ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது 20 ஓவர் போட்டியில், நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்கின்றன.

இந்த நிலையில் போட்டியின் போது, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி 4-வது விக்கெட்டிற்கு களமிறங்கி பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். அப்போது எல்லை கோட்டிற்கு வெளியில் வேகமாக சென்ற டோனி சிக்ஸ் அடிப்பதை போல சென்று பந்தை தடுத்துவிட்டு ரன் எடுக்க ஆரம்பித்து விட்டார். எப்படியும் பந்து கைக்கு வந்துவிடும், விக்கெட் எடுத்துவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்த நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் டிம் சீபெர்ட் அப்படியே ஏமாற்றத்துடன் நின்று கொண்டிருக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. உலகக் கோப்பை: இந்தியாவை தோற்கடிப்பதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றை உருவாக்க முடியும்- மொயின் கான்
உலகக் கோப்பையில் இந்தியாவை தோற்கடிப்பதன் மூலம் பாகிஸ்தான் வரலாற்றை உருவாக்க முடியும் என முன்னாள் கேப்டன் மொயின் கான் கூறியுள்ளார்.
2. கிரிக்கெட் சங்க தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் பண்டாரி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
3. 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 10 ரன்னில் சுருண்ட சவுத் ஆஸ்திரேலியன் பெண்கள் கிரிக்கெட் அணி
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சவுத் ஆஸ்திரேலியன் பெண்கள் கிரிக்கெட் அணி 10 ரன்னில் சுருண்டது.
4. எதிரணியை அச்சுறுத்தக்கூடிய பந்துவீச்சாளராக பும்ரா இருப்பார் -சச்சின் தெண்டுல்கர்
உலகக்கோப்பையில், எதிரணியை அச்சுறுத்தக்கூடிய பந்துவீச்சாளராக இந்திய அணியின் பும்ரா இருப்பார் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
5. தோனி கீப்பிங் செய்யும்போது கிரீஸைவிட்டு வெளியேறாதீர்கள் -ஐசிசி எச்சரிக்கை
தோனி கீப்பிங் செய்யும்போது கிரீஸைவிட்டு வெளியேறாதீர்கள் என டுவிட்டரில் ஐசிசி தெரிவித்து உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...