கிரிக்கெட்

3வது டி20 கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு + "||" + 3rd T20 cricket; India won the toss and chose to field

3வது டி20 கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

3வது டி20 கிரிக்கெட்; டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
ஹாமில்டன்,

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடி வருகிறது.  நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியது.

இதன்பின் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டத்தில் 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடக்கிறது.  இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் பந்து வீச்சாளர் குல்தீப் சேர்க்கப்பட்டு உள்ளார்.  சஹால் நீக்கப்பட்டு உள்ளார்.  இதேபோன்று நியூசிலாந்து அணியில் பெர்குசனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.  பிளேர் டிக்னெருக்கு அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு சுனில்ஜோஷி விண்ணப்பம்
இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கு சுனில்ஜோஷி விண்ணப்பம் அளித்துள்ளார்.
2. இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி - கேப்டன் விராட்கோலி பேட்டி
ரோகித் சர்மாவுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி தொடர்ந்தால் மகிழ்ச்சி அடைவோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
3. இந்திய அணியின் புதிய பயிற்சியாளரை கபில்தேவ் கமிட்டி தேர்வு செய்யும் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சியாளரை கபில்தேவ் தலைமையிலான கமிட்டி தேர்வு செய்யும் என்று கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அறிவித்துள்ளது.
4. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
5. ரவி சாஸ்திரி பதவி நீடிக்குமா? பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பம் கோருகிறது பிசிசிஐ
இந்திய அணியின் பயிற்சிக்குழுவின் பதவிக்காலம் வரும் செப்டம்பருடன் முடிவுக்கு வருகிறது.