கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி 277 ரன்னில் ஆல்-அவுட் + "||" + Test against West Indies: All out of England 277 runs

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி 277 ரன்னில் ஆல்-அவுட்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி 277 ரன்னில் ஆல்-அவுட்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 277 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
செயின்ட் லூசியா, 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 107 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஜோஸ் பட்லரும், பென் ஸ்டோக்சும் அரைசதம் அடித்து சரிவை சமாளித்தனர். ஆட்ட நேர முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 277 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பட்லர் 67 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 79 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது.