கிரிக்கெட்

கொல்கத்தாவில் பயிற்சி ஆட்டத்தில் பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் + "||" + Ashok Dinda survives massive injury

கொல்கத்தாவில் பயிற்சி ஆட்டத்தில் பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்

கொல்கத்தாவில் பயிற்சி ஆட்டத்தில் பந்து தாக்கியதில் சுருண்டு விழுந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்
கொல்கத்தாவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டாவுக்கு தலையில் பந்து தாக்கி பலத்த காயம் ஏற்பட்டது.
கொல்கத்தா,

கொல்கத்தாவில் சையது முஸ்தாக் அலி டி20 சாம்பியன்ஷிப் போட்டிக்கான பயிற்சி ஆட்டம் இன்று நடந்தது.  இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா பந்து வீசினார்.  இந்த பந்து பேட்ஸ்மேனால் திண்டாவை நோக்கியே அடிக்கப்பட்டது.  இதனால் தன்னை நோக்கி வந்த பந்தினை பிடிக்க திண்டா முயன்றார்.

ஆனால் அவரது முயற்சிக்கு முன் பந்து முன்னந்தலையை கடுமையாக தாக்கியது.  இதில் பலத்த காயம் அடைந்த திண்டா மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.  அவரை மற்ற வீரர்கள் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது என பரிசோதித்தனர்.  உடனடியாக மருத்துவ உதவியாளர்கள் அங்கு சென்று காயம் பற்றி குறித்து கொண்டனர்.

இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  அங்கு திண்டாவுக்கு சி.டி. ஸ்கேன் செய்யப்பட்டது.  அவர் நலமுடன் உள்ளார் என்றும் அவருக்கு அடுத்த 2 நாட்களுக்கு ஓய்வு தேவை என்றும் மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.  இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.