கிரிக்கெட்

கிரிக்கெட் சங்க தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் + "||" + Chairman of the Cricket Association On the former cricketer mysterious people attacked

கிரிக்கெட் சங்க தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

கிரிக்கெட் சங்க தலைவரான முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் பண்டாரி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் மைதானத்தில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு பயிற்சி அளித்து கொண்டிருந்துள்ளார் அமித் பண்டாரி. அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத சுமார் 15 பேர், அமித் பண்டாரியை சூழ்ந்து கொண்டு ஹாக்கி மட்டையாலும், இரும்பு கம்பிகளாலும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் அந்த நபர்கள் அவசர அவசரமாக அங்கிருந்து தலைமறைவாகியுள்ளனர். இந்த தாக்குதலில் தலையிலும், காது பகுதிகளிலும் பலத்த காயம் அடைந்த அமித் பண்டாரி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அமித் பண்டாரி தற்போது, மூத்த வீரர்களுக்கான டெல்லி மற்றும் மாநில கிரிக்கெட் சங்கத்தின் வாரியத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இதனால் அணியில் தேர்வு செய்யப்படாத ஏதேனும் ஒரு வீரர் பழிவாங்கும் முயற்சியாக இந்த தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் உயிரிழப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் உயிரிழந்தார்.
2. அவரை தீவிரவாதி என்றுதான் அழைப்போம் - தோனி குறித்து அவரது நண்பர் தகவல்
அவரை தீவிரவாதி என்றுதான் அழைப்போம் - தோனி குறித்து அவரது பீகார் அணி நண்பரான சத்ய பிரகாஷ் தகவல் தெரிவித்து உள்ளார்.
3. அடுத்த கேப்டன் ரோகித் சர்மா தான்! கோலியை மீண்டும் சீண்டும் கவுதம் கம்பீர்
அடுத்த கேப்டன் ரோகித் சர்மா தான்! கோலியை மீண்டும் சீண்டி உள்ளார் கவுதம் கம்பீர்
4. அன்பையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த ரசிகர்களுக்கு நன்றி ஷேன் வாட்சன்
கடந்த சில தினங்களாக தனக்கு பாராட்டுகளையும், அன்பையும் அளித்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வாட்சன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
5. இலங்கையில் மசூதிகள் - இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல் கிரிக்கெட் வீரர்கள் கருத்து
வன்முறையை உருவாக்குபவர்கள் தீவிரவாதிகள் எனவும் அவர்கள் இலங்கையை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே அப்படி செய்வதாகவும் மஹேலா ஜெயவர்தனே கூறியுள்ளார்.