பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம்


பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் ஜெமிமா, மந்தனா முன்னேற்றம்
x
தினத்தந்தி 12 Feb 2019 10:00 PM GMT (Updated: 12 Feb 2019 8:42 PM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), பெண்கள் 20 ஓவர் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), பெண்கள் 20 ஓவர் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்டிங் தரவரிசையில் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் (765 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் (737 புள்ளி) 4 இடங்கள் முன்னேறி 2–வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மொத்தம் 130 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த ஏற்றத்தை பெற்றுள்ளார். இதே தொடரில் 2 அரைசதம் உள்பட 180 ரன்கள் குவித்த இந்திய துணை கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 4 இடங்கள் உயர்ந்து 6–வது இடத்துக்கு வந்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் மேகன் ஸ்கட் முதலிடத்திலும், இந்தியாவின் பூனம் யாதவ் 2–வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.

ஆல்–ரவுண்டர்களின் தரவரிசையில் வெஸ்ட் இண்டீசின் டியேந்திர டோட்டின் ஒரு இடம் உயர்ந்து முதலிடத்தை பிடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் அவர் 158 ரன்கள் விளாசியதுடன், 3 விக்கெட்டும் வீழ்த்தியதால் ஆல்–ரவுண்டர்களில் ‘நம்பர் ஒன்’ அந்தஸ்தை அடைந்துள்ளார்.


Next Story