கிரிக்கெட்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுரேஷ் ரெய்னா + "||" + Put an end to the rumor Suresh Raina

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுரேஷ் ரெய்னா

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சுரேஷ் ரெய்னா
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான சுரேஷ்ரெய்னா கார் விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப்பில் செய்திகள் வெளியாகின.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான சுரேஷ்ரெய்னா கார் விபத்தில் சிக்கி இறந்து விட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் யூ டியூப்பில் செய்திகள் வெளியாகின. இந்த வதந்திக்கு சுரேஷ்ரெய்னா டுவிட்டர் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், ‘கடந்த சில நாட்களாக என்னை பற்றி போலியான, தவறான செய்திகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. நான் கார் விபத்தில் சிக்கியதாக வெளியாகும் செய்தி வேதனை அளிக்கிறது. இந்த செய்தியால் எனது குடும்பத்தினரும், நண்பர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது போன்ற செய்தியை தயவு செய்து தவிருங்கள். இறைவனின் கருணையால் நான் நலமாக இருக்கிறேன். என்னை பற்றி தவறான செய்தி வெளியிட்ட யூ டியூப் மீது விரைவில் கடுமையான நடவடிக்கை எடுப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.