கிரிக்கெட்

கோலிக்கு, சங்கக்கரா புகழாரம் + "||" + To Goli, Sangakkara is the praise

கோலிக்கு, சங்கக்கரா புகழாரம்

கோலிக்கு, சங்கக்கரா புகழாரம்
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று தந்த முதல் இந்திய கேப்டன் என்ற சிறப்பை பெற்ற விராட் கோலிக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா புகழாரம் சூட்டியுள்ளார்.

புதுடெல்லி, 

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று தந்த முதல் இந்திய கேப்டன் என்ற சிறப்பை பெற்ற விராட் கோலிக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்கக்கரா புகழாரம் சூட்டியுள்ளார். சங்கக்கரா அளித்த ஒரு பேட்டியில் ‘எல்லாவற்றிலும் விராட் கோலியின் ஆட்டம் சிறப்பாக இருக்கிறது. இப்போது உலக கிரிக்கெட் அரங்கில் மற்றவர்களை காட்டிலும் கோலி உச்சத்தில் இருக்கிறார். இதே வேகத்தில் அவர் முன்னேறும் போது, கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவராக அவர் இருப்பார். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அவர் சீராக ரன் குவித்து வருவது வியப்புக்குரியது’ என்றார். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் கோலி முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியரின் தேர்வுகள்...