முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணியை எளிதில் வீழ்த்தியது, நியூசிலாந்து மார்ட்டின் கப்தில் சதம் அடித்தார்


முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: வங்காளதேச அணியை எளிதில் வீழ்த்தியது, நியூசிலாந்து மார்ட்டின் கப்தில் சதம் அடித்தார்
x
தினத்தந்தி 13 Feb 2019 10:30 PM GMT (Updated: 13 Feb 2019 9:18 PM GMT)

நியூசிலாந்து–வங்காளதேச அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது.

நேப்பியர், 

நியூசிலாந்து–வங்காளதேச அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி, நியூசிலாந்து வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 48.5 ஓவர்களில் 232 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. அதிகபட்சமாக முகமது மிதுன் 62 ரன்னும், முகமது சைபுதின் 41 ரன்னும், சவும்யா சர்கார் 30 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி தரப்பில் டிரென்ட் பவுட்ல், மிட்செல் சான்ட்னெர் தலா 3 விக்கெட்டும், பெர்குசன், மேட் ஹென்றி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி 44.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ஹென்றி நிகோல்ஸ் 53 ரன்னும், கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 15–வது சதம் அடித்த தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 116 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 117 ரன்னும், ராஸ் டெய்லர் 49 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 45 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்தில் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் (சனிக்கிழமை) கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கிறது.


Next Story