கிரிக்கெட்

இங்கிலாந்து லயன்சுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி + "||" + Test against England Lions: India 'A' team is a great success

இங்கிலாந்து லயன்சுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி

இங்கிலாந்து லயன்சுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி
இந்தியா ‘ஏ’–இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மைசூரில் கடந்த 13–ந்தேதி தொடங்கியது.

மைசூர், 

இந்தியா ‘ஏ’–இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மைசூரில் கடந்த 13–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய ‘ஏ’ அணி 392 ரன்கள் குவித்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் 144 ரன்னில் அடங்கி பாலோ–ஆன் ஆனது.

‘பாலோ–ஆன்’ பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி 248 ரன்கள் பின்தங்கிய நிலையில் 3–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடியது. அந்த அணி 53.3 ஓவர்களில் 180 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர் மயங்க் மார்கண்டே 5 விக்கெட்டுகளை அள்ளினார். இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய ‘ஏ’ அணி தொடரையும் 1–0 என்ற கணக்கில் கைப்பற்றியது.