கிரிக்கெட்

மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் - ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தகவல் + "||" + We will not play with Pakistan cricket unless the federal government is permitted - IPL Chairman Rajiv Shukla reported

மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் - ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தகவல்

மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் - ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தகவல்
மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் என ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) சேர்மன் ராஜீவ் சுக்லா டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும். மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாடமாட்டோம். எல்லாவற்றையும் விட விளையாட்டு மேலானது தான். அதேநேரத்தில் யாரோ சிலர் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்தால் அது நிச்சயம் விளையாட்டையும் கூட பாதிக்க தான் செய்யும்.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். அது குறித்து தற்போது எங்களால் எதுவும் சொல்ல முடியாது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பொறுத்து இருந்து பார்ப்போம்.

பாகிஸ்தானின் செயல்பாட்டால் ஏற்பட்டுள்ள கோபத்தால் மக்கள் தங்கள் கருத்தை இதுபோன்று பிரதிபலிக்கிறார்கள். பாகிஸ்தான் தங்களது செயல்பாட்டை மாற்றி கொள்ள வேண்டும். அவர்கள் தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கக்கூடாது. இதனை தான் நாம் தொடக்கம் முதலே சொல்லி வருகிறோம். தீவிரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து நமது அரசு நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அளித்து இருக்கிறது. அதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.