கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை வெளியீடு: மார்ச் 23-ம் தேதி முதல் போட்டிகள் ஆரம்பம் + "||" + Schedule for IPL tournament The tournament starts on March 23

ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை வெளியீடு: மார்ச் 23-ம் தேதி முதல் போட்டிகள் ஆரம்பம்

ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை வெளியீடு: மார்ச் 23-ம் தேதி முதல் போட்டிகள் ஆரம்பம்
2019-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான முதல் கட்ட அட்டவணையை பி.சி.சி.ஐ. இன்று வெளியிட்டது.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த, 12-வது ஐ.பி.எல். போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் முதல் 17 போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐ.பி.எல். தொடரின் முதல்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியானது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்த ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ்(டேர்டெவில்ஸ் பெயர்மாற்றம்). மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ்லெவன்பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.