கிரிக்கெட்

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல் + "||" + The first one-day cricket match was a collision between England and West Indies today

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோத உள்ளன.
பிரிஜ்டவுன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இங்கிலாந்து அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பிரிஜ்டவுனில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.


உலக கோப்பைக்கு முன்பாக சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடும் கடைசி தொடர் இதுவாகும். மூத்த வீரர் கிறிஸ் கெய்ல் அணிக்கு திரும்பியிருக்கிறார். அவரது ஆட்டத்திறன் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிய இந்த தொடர் உதவும். ஜாசன் ஹோல்டர் தலைமையிலான அந்த அணியில் ஷாய் ஹோப், ஹெட்மயர், கெமார் ரோச், டேரன் பிராவோ ஆகிய நட்சத்திர வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.இங்கிலாந்து அணி இயான் மோர்கன் தலைமையில் களம் இறங்குகிறது. டெஸ்ட் தொடரை தாரைவார்த்த இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரில் பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும். பென் ஸ்டோக்ஸ், ஜாசன் ராய், ஜோ ரூட், அலெக்ஸ் ஹாலெஸ், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ என்று அதிரடி சூரர்கள் அந்த அணியில் அங்கம் வகிக்கிறார்கள்.

ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் 126 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணி அந்த இடத்தை தக்க வைக்க இந்த தொடரை கைப்பற்றியாக வேண்டும். இந்த தொடரை இழந்தால் இங்கிலாந்து 2-வது இடத்துக்கு சரியும். 2-வது இடத்தில் உள்ள இந்திய அணி (122 புள்ளி) முதலிடத்திற்கு முன்னேறும். அதே சமயம் இந்த தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக வென்றால் ஒரு புள்ளி மட்டுமே கூடுதலாக கிடைக்கும். அவர்கள் எதிர்த்து விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 72 புள்ளிகளுடன் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ளது.

இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.