கிரிக்கெட்

எங்க பிரதமர் தெளிவாகத்தான் பேசி இருக்கார்... ஷாகித் அப்ரிடி + "||" + Shahid Afridi backs Pakistan PM Imran Khan’s statement warning India against strikes post Pulwama attack

எங்க பிரதமர் தெளிவாகத்தான் பேசி இருக்கார்... ஷாகித் அப்ரிடி

எங்க பிரதமர் தெளிவாகத்தான் பேசி இருக்கார்... ஷாகித் அப்ரிடி
எங்க பிரதமர் தெளிவாகத்தான் பேசி இருக்கார் என தனது டுவிட்டரில் ஷாகித் அப்ரிடி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி, 

காஷ்மீரில், இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் எதிரொலியாக, உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி பாகிஸ்தானுடன் மோதக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில் இந்திய ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் பற்றி பாகிஸ்தான் பிரதமர் தெள்ளத்தெளிவாக பேசியிருப்பதாக, பிரபல கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி கருத்து பதிவிட்டுள்ளார்.

தாக்குதலில் சம்மந்தப்பட்ட பயங்கரவாதிகள் பதில் கொடுத்தே ஆக வேண்டும் எனவும், நிச்சயமாக தாக்குதல் நடத்தப்படும் எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.ஆனால் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர், விரைவில் இந்தியாவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காகவே இப்படிப்பட்ட வேலைகளை செய்துவிட்டு பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

அப்படி பாகிஸ்தான் செய்திருந்தால், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பியுங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான ஷாகித் அப்ரிடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தங்களுடைய பிரதமர் முற்றிலும் தெள்ளத் தெளிவாக பேசியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.