கிரிக்கெட்

‘வருவோம் வெல்வோம் செல்வோம்’; இம்ரான் தாஹிர் தமிழில் ட்வீட். + "||" + Coming Win Let's go Imran Tahir tweeted in Tamil.

‘வருவோம் வெல்வோம் செல்வோம்’; இம்ரான் தாஹிர் தமிழில் ட்வீட்.

‘வருவோம் வெல்வோம் செல்வோம்’; இம்ரான் தாஹிர் தமிழில் ட்வீட்.
வரும் மார்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் ஐபிஎல் 2019-க்கான போட்டிகள் தொடங்குகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இம்ரான் தாஹிர் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார்!
மும்பை

ஐபிஎல் தொடர்களில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு முதல் விளையாடி வருபவர் தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர். இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் போல் இவரும் அவ்வப்போது தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றார்.

அந்த வகையில் நேற்று அவர் செய்திருந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஐபிஎல்  2019 தொடருக்கான முதல் 2 வாரத்திற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியானது. இதனைதொடர்ந்து இம்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பதிவினை பதிவிட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது... "என் இனிய தமிழ் மக்களே நலமா? மார்ச் 23-ஆம் தேதி நமது கோட்டையில் களம் இறங்குகிறோம். வந்தோம் வென்றோம் சென்றோம். வருவோம் வெல்வோம் செல்வோம். இந்த வருஷமும் காளியோட ஆட்டத்த பாப்பீங்க. கொல காண்டுல வாரோம். செண்டிமெண்ட் இருக்குறவன் குறுக்க வராதீங்க. எடுடா வண்டிய போடுடா விசில" என பதிவிட்டுள்ளார்.

இம்ரான் ட்விட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்... "நலம் நலம் அறிய ஆவல். ஆசையாய் வளர்க்கும் சிங்கக்குட்டி எப்படி இருக்கிறது. தெற்கு ஆப்பரிக்காவில் நல்ல மழை பெய்கிறதா? வீட்டில் அனைவரையும் கேட்டதாக கூறவும். தம்பி நிகிடி சவுக்கியமா? வரும் போது மறவாமல் சீமை ரொட்டியும் மிட்டாயும் வாங்கி வரவும்" என்று பதிவிட்டுள்ளனர். 


தொடர்புடைய செய்திகள்

1. மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்குமோ என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் - டோனி
போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்குமோ என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறி உள்ளார்.
2. ரூ.481 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ரூ.11 கோடி நஷ்டஈடு கொடுத்துள்ளது
ரூ.481 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.11 கோடி நஷ்டஈடு கொடுத்து உள்ளது.
3. டோனி, சுரேஷ் ரெய்னா, ரோகித் அதிக சிக்சர்கள் சாதனை படைக்கப்போவது யார்?
ஐபிஎல் போட்டியில் அதிக சிக்சர்கள் சாதனையை படைக்கப்போவது யார் என்பது தெரியவரும்.
4. முகமது ஷமிக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
முகமது ஷமிக்கு எதிராக கொல்கத்தா காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
5. ஐபிஎல் போட்டி : 25 ஆயிரம் ரசிகர்களுக்கு ரூ. 500 க்கு டிக்கெட் - டேவிட் வார்னர்
12-வது ஐபிஎல் போட்டியில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் 25 ஆயிரம் ரசிகர்களுக்கு 500 ரூபாய்க்கு டிக்கெட் வழங்கப்போவதாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அறிவித்துள்ளது. இதை அந்த அணியின் வீரர் டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார்.