கிரிக்கெட்

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் - ரவிசங்கர் பிரசாத் + "||" + Banning cricket with Pakistan a justified demand Union minister Ravi Shankar Prasad

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் - ரவிசங்கர் பிரசாத்

பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் - ரவிசங்கர் பிரசாத்
பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கைதான் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கை பல்வேறு மட்டத்தில் எழுந்து வருகிறது. இந்தியா  மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்கனவே இருதரப்பு போட்டிகள் நடைபெறவில்லை. ஆனால் சர்வதேச கிரிக்கெட் வாரிய போட்டிகளில் விளையாடி வருகிறது. கடைசியாக ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாடியது.  2019 உலகக் கோப்பைப் போட்டியில் ஜுன் 16 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

 இந்நிலையில் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட தடை கோருவது நியாயமான கோரிக்கை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். 

ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “கிரிக்கெட் விவகாரத்தில் நான் கருத்து கூற முடியாது, ஆனால் விளையாடக்கூடாது என்பவர்களின் கோரிக்கையும் நியாயமானதுதான். சினிமா மற்றும் கலை நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளதை நீங்கள் பார்த்து இருக்கலாம். இப்போது வழக்கமான நிலை காணப்படவில்லை. எனவே,  இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. சர்வதேச போட்டியாக இருக்கும் நிலையில், இந்திய பாதுகாப்பு முகமையுடன் ஆலோசனையை மேற்கொண்டு, அதனுடைய கருத்தை மனதில் கொண்டு சர்வதேச கிரிக்கெட் வாரியமும், இந்திய கிரிக்கெட் வாரியமும் இறுதி முடிவை எடுக்க வேண்டும்.” என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்
ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரத்தில் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் என அமெரிக்காவிற்கு இந்தியா பதிலை கொடுத்துள்ளது.
2. இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது - இங்கிலாந்து நாடாளுமன்ற குழு
இந்தியாவுடனான பெரும்பாலான உறவுகளை மேற்கொள்ள இங்கிலாந்து தனது வாய்ப்பை தவறவிட்டது என்று பிரிட்டிஷ் குழு தெரிவித்துள்ளது!!
3. பலம் வாய்ந்த இங்கிலாந்தை வீழ்த்தியது எப்படி? மலிங்கா விளக்கம்
பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தி இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு
பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
5. ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை
நாடு திரும்பும் போது ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று சக வீரர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.