கிரிக்கெட்

தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன் + "||" + World Cup not more important than the country, say Harbhajan and Azharuddin

தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன்

தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன்
தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது என ஹர்பஜன் சிங் மற்றும் அசாருதீன் கூறி உள்ளனர்.
புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாட கூடாது என ஹர்பஜன் சிங் மற்றும் அசாருதீன் வலியுறுத்தியுள்ளனர்.  

2019 உலகக் கோப்பை போட்டியில் ஜுன் 16 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் விளையாடுவது தொடர்பாக இந்தியா பரிசீலனை செய்ய வேண்டும்.  இந்தியாதான் முதலில், பின்னர்தான் விளையாட்டு என கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

ஹர்பஜன் சிங் பேசுகையில், “ஒரு கிரிக்கெட் வீரராக தேசத்தைவிட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முக்கியமானதாக பார்க்கவில்லை. முதலில் நாம் இந்தியர்கள், பின்னர்தான் நாம் கிரிக்கெட் வீரர்கள். தேசத்தால்தான் நாம் இப்போது இந்நிலையில் உள்ளோம். இந்தியாவிற்காக நாம் விளையாடுவதால் மக்கள் நம்மை நேசிக்கிறார்கள்” என கூறினார். 

பாகிஸ்தான் உடனான இருதரப்பு போட்டியை புறக்கணித்த இந்தியா, உலக கோப்பையிலும் விளையாடக்கூடாது.  “இருதரப்பு போட்டிகளில் விளையாடவில்லை என்றால், மற்ற பகுதிகளிலும் விளையாடமலே இருக்கலாம். ஹர்பஜன் சிங் பேச்சை நான் ஆதரிக்கிறேன். தேசத்தைவிடவும் உலக கோப்பை முக்கியமானதாக இருக்க முடியாது” என அசாருதீன் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து அணிக்கு முதல் தோல்வி: பாபர் அசாம் சதத்தால் பாகிஸ்தான் 3-வது வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட்டில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி 3-வது வெற்றியை சுவைத்தது.
2. இங்கிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது, ஆஸ்திரேலியா - ஆரோன் பிஞ்ச் சதம் அடித்தார்
உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தை வீழ்த்தி முதல் அணியாக அரைஇறுதிக்குள் நுழைந்தது.
3. உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
4. ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேச அணி அபார வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட்டில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணி வெற்றிபெற்றது.
5. உலக கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது.