கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கிறிஸ் கெயில் புதிய சாதனை + "||" + Chris Gayle Sets New Record In International Cricket

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கிறிஸ் கெயில் புதிய சாதனை

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கிறிஸ் கெயில் புதிய சாதனை
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெயில் புதிய சாதனையை படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெயில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து புதிய சாதனையை படைத்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், இந்த சாதனையை கிறிஸ் கெயில் நிகழ்த்தினார். 444 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள கெயில், 477 சிக்சர்கள் அடித்து இந்த சாதனையை நிகழ்த்தினார்.   இதற்கு முன்பு, பாகிஸ்தான் வீரர் அப்ரிடி 524 போட்டிகளில் 476 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. 

கிறிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் 276 சிக்சர்களையும், 20 ஓவர் போட்டிகளில் 103 சிக்சர்களையும், டெஸ்ட் போட்டிகளில் 98 சிச்சர்களையும் அடித்துள்ளார். 398 சிக்சர்கள் அடித்து நியூசிலாந்து வீரர் மெக்கல்லம் 3-வது இடத்திலும், 352 சிக்சர்களுடன் சனத் ஜெயசூர்யா 4-வது இடத்திலும், 349 சிக்சர்களுடன் ரோகித் சர்மா 5-வது இடத்திலும் உள்ளனர்.  

வரும் உலக கோப்பை தொடரோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிறிஸ் கெயில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.