தேசிய செய்திகள்

உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை + "||" + Keep Pakistan out of Cricket World Cup, BCCI to tell ICC in wake of Pulwama terror attack

உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை

உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய துணை ராணுவ படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பாகிஸ்தானுடன் விளையாட்டு உறவை துண்டிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்துள்ளனர். 

இங்கிலாந்தில் நடக்க உள்ள 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது ஜூன் 16-ந்தேதி மான்செஸ்டரில் நடக்கும் லீக்கில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோத வேண்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தை இந்திய அணி புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது என முன்னாள் வீரர்கள் ஹர்பஜன் சிங் மற்றும் அசாருதீன் வலியுறுத்தியுள்ளனர். உலக கோப்பை போட்டி அட்டவணையில் மாற்றம் ஏதும் செய்யமாட்டோம் என்று ஐ.சி.சி. ஏற்கனவே கூறி விட்டது. 

இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. பாகிஸ்தானை வெளியேற்ற வேண்டும் என்று ஐசிசிக்கு கடிதம் எழுதுமாறு பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரியை,  நிர்வாக குழு தலைவர் வினோத் ராய் கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  பாகிஸ்தான் உடன் எந்தஒரு போட்டியையும் விளையாடும் எண்ணம் இந்தியாவிடம் இல்லை என்பதை தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார் என அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

ஐசிசி கூட்டம் வருகிற 27-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை துபாயில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் உலக கோப்பை மோதல் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. நிதி நெருக்கடியிலும் அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் : இந்திய பாதுகாப்பு துறை எச்சரிக்கை
நிதி நெருக்கடியில் சிக்கியிருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகப்படுத்தி வருவதோடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
2. தலாய் லாமா தேர்வு விவகாரத்தில் இந்தியா தலையிடக்கூடாது: சீனா சொல்கிறது
அடுத்த தலாய்லாமாவை நாங்களே முடிவு செய்வோம், இந்தியா தலையிடக்கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
3. வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் இந்தியா மீதும் விசாரணை - அமெரிக்கா
இறக்குமதிகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்துவதற்கு முன்னோட்டமாக, வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் இந்தியா மீதும் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.
4. பாகிஸ்தானில் 25% குழந்தைகள் 2030-ல் படிக்காதவர்களாக இருப்பார்கள் : யுனெஸ்கோ
யுனெஸ்கோவின் புதிய கணக்கெடுப்புப்படி பாகிஸ்தானில் 25% குழந்தைகள் 2030-ல் படிக்காதவர்களாக இருப்பார்கள்.
5. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு அல்-கொய்தா பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுத்து உள்ளது.