கிரிக்கெட்

பி.சி.சி.ஐ.யின் குறைதீர் அதிகாரி பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின் நியமனம் + "||" + SC appoints former judge D K Jain as first ombudsman in BCCI

பி.சி.சி.ஐ.யின் குறைதீர் அதிகாரி பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின் நியமனம்

பி.சி.சி.ஐ.யின் குறைதீர் அதிகாரி பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின் நியமனம்
பி.சி.சி.ஐ.யின் குறைதீர் அதிகாரி பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின் நியமிக்கப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் (பி.சி.சி.ஐ.) குறைதீர் அதிகாரி பதவிக்கு சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின் முதன்முறையாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே மற்றும் ஏ.எம். சாப்ரே அடங்கிய அமர்வு கூறும்பொழுது, ஆலோசனைகள் மற்றும் ஒப்புதலுக்கு பின், ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே. ஜெயின் பெயரை பி.சி.சி.ஐ.யின் குறைதீர் அதிகாரி பதவிக்கு நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதற்கு நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்.

இதன்படி பி.சி.சி.ஐ.யில் முதன்முறையாக இந்த பதவிக்கு அவரை நியமிக்கிறோம் என தெரிவித்து உள்ளனர்.