கிரிக்கெட்

ஆஸ்திரேலிய தொடர்: பாண்ட்யா விலகல் + "||" + Australian series Pandya distortion

ஆஸ்திரேலிய தொடர்: பாண்ட்யா விலகல்

ஆஸ்திரேலிய தொடர்: பாண்ட்யா விலகல்
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
புதுடெல்லி,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்த தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நேற்று விலகினார்.

பாண்ட்யா, முதுகுபிடிப்பால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு ஓய்வு அளிக்க கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி முடிவு செய்திருப்பதாகவும், காயத்தில் இருந்து மீள்வதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சி முறைகளை அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் அடுத்த வாரம் முதல் மேற்கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்ட்யா இல்லாதது இந்திய அணிக்கு சற்று பின்னடைவு தான் என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு பதிலாக ஒரு நாள் தொடருக்கு மட்டும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய தொடர்: இந்திய ஆக்கி அணி அறிவிப்பு
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய ஆக்கி அணி அறிவிக்கப்பட்டது.
2. துளிகள்
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த இளம் வீரர் பிரித்வி ஷா கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அணியில் இருந்து விலகினார்.