கிரிக்கெட்

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் மும்பையில் இன்று நடக்கிறது + "||" + India-England Womens teams One day cricket Today is happening in Mumbai

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் மும்பையில் இன்று நடக்கிறது

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் மும்பையில் இன்று நடக்கிறது
இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது.
மும்பை,

ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் மிதாலி ராஜ் அளித்த பேட்டியில், ‘உலக சாம்பியனான இங்கிலாந்து அணி மிகவும் வலுவானதாகும். எனவே நாம் நம்பிக்கையுடன் விளையாட வேண்டியது அவசியமானதாகும்.

2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கு இந்த போட்டி முடிவு எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே இந்த போட்டி தொடரில் இருந்து முடிந்த வரை அதிக புள்ளிகள் பெற முயற்சிப்போம்’ என்றார்.