கிரிக்கெட்

பள்ளி கிரிக்கெட்: செயின்ட் பீட்ஸ் அணி ‘சாம்பியன்’ + "||" + School cricket: St Beats team 'champion'

பள்ளி கிரிக்கெட்: செயின்ட் பீட்ஸ் அணி ‘சாம்பியன்’

பள்ளி கிரிக்கெட்: செயின்ட் பீட்ஸ் அணி ‘சாம்பியன்’
பள்ளி கிரிக்கெட் போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் செயின்ட் பேட்ரிக்ஸ்-செயின்ட் பீட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த செயின் பேட்ரிக்ஸ் அணி 42.5 ஓவர்களில் 96 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய செயின்ட் பீட்ஸ் அணி 34.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.