கிரிக்கெட்

பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை: இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் பேட்டி + "||" + Like South Africa, Pakistan should face cricket apartheid: Vinod Rai

பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை: இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் பேட்டி

பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை: இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் பேட்டி
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் தெரிவித்தார்.
புதுடெல்லி

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைபடை தாக்குதலில் இந்திய துணைராணுவ படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் எதிரொலியாக, பாகிஸ்தானுடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. அத்துடன் பயங்கரவாதத்துடன் தொடர்பு வைத்துள்ள பாகிஸ்தானை கிரிக்கெட்டில் இருந்து தனிமைப்படுத்தவும் இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதன் முடிவில் நிர்வாக கமிட்டியின் தலைவர் வினோத் ராய் நிருபர்களிடம் கூறியதாவது:-

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி ஜூன் 16-ந்தேதி பாகிஸ்தானுடன் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் விளையாடுவதா, வேண்டாமா என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. உலக கோப்பை போட்டிக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ளது. எனவே உரிய நேரத்தில் அது குறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுப்போம்.

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த எங்களது கவலையையும், வேதனையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) தெரிவித்துள்ளோம். இதையொட்டி ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதியுள்ளோம். அதில், உலக கோப்பை கிரிக்கெட்டின் போது வீரர்களுக்கு கூடுதலான பாதுகாப்பு தேவை என்பதையும், கிரிக்கெட் விளையாடும் நாடுகள் எதிர்காலத்தில், தீவிரவாதத்துக்கு ஆதரவு தரும் நாடுகளுடன் எந்தவிதமான உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்பதையும் வலியுறுத்தி இருக்கிறோம். இவ்வாறு வினோத்ராய் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்: இங்கிலாந்து கேப்டன் மோர்கன் நம்பிக்கை
மீதமுள்ள இரு போட்டிகளிலும் வென்று அரையிறுதிக்கு நிச்சயம் தகுதி பெறுவோம் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. இந்தியாவை வலிமையான நாடாக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
இந்தியா வலிமையான, பாதுகாப்பான நாடு என்ற கனவை நிறைவேற்ற அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
3. இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செல்கிறார்கள் - மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தகவல்
இந்தியாவில் இருந்து 2 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை செல்கிறார்கள். இதில் 48 சதவீதம் பேர் பெண்கள் என மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி தகவல் தெரிவித்தார்.
4. காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழப்பு
காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் காயமடைந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலுக்கு காரணமான முக்கிய சதிகாரன், துப்பாக்கி சண்டையில் பலியானான்.
5. இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் ஐதராபாத்தில் 2 பேர் கைது
ஐதராபாத்தில் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை வைத்து சூதாட்டம் ஆடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.