கிரிக்கெட்

2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு வெஸ்ட்இண்டீஸ் பதிலடி + "||" + 2nd one-day cricket: West Indies retaliate for England

2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு வெஸ்ட்இண்டீஸ் பதிலடி

2-வது ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு வெஸ்ட்இண்டீஸ் பதிலடி
2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு வெஸ்ட்இண்டீஸ் பதிலடி கொடுத்தது.
பிரிட்ஜ்டவுன்,

இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் சேர்த்தது. தனது 4-வது சதத்தை பூர்த்தி செய்த ஹெட்மயர் 83 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 104 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் அரைசதம் (ஒரு பவுண்டரி, 4 சிக்சருடன் 50 ரன்) அடித்தார்.


தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 263 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 79 ரன்னும், கேப்டன் இயான் மோர்கன் 70 ரன்னும் எடுத்தனர். வெஸ்ட்இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. 3-வது ஆட்டம் செயின்ட் ஜார்ஜில் நாளை நடக்கிறது.