கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பேட்டிங் + "||" + 20 ODI against Australia Indian team batting

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர்  கிரிக்கெட் போட்டி: இந்திய அணி பேட்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
விசாகப்பட்டினம்,

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஆஸ்திரேலிய அணியுடனான முதலாவது 20 ஓவர் போட்டி தொடங்குவதற்கு முன்பு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), தினேஷ் கார்த்திக் அல்லது லோகேஷ் ராகுல், ரிஷாப் பான்ட், டோனி, குருணல் பாண்ட்யா, விஜய் சங்கர், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.

ஆஸ்திரேலியா: டார்சி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரி, கம்மின்ஸ், நாதன் கவுல்டர்-நிலே, ஆடம் ஜம்பா, கேன் ரிச்சர்ட்சன் அல்லது ஜாசன் பெரேன்டோர்ப் அல்லது ஜெயே ரிச்சர்ட்சன்.