கிரிக்கெட்

முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: பீகாரை வீழ்த்தியது தமிழகம் + "||" + Mushtaq Ali Cup Cricket: Tamil Nadu defeated Bihar

முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: பீகாரை வீழ்த்தியது தமிழகம்

முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட்: பீகாரை வீழ்த்தியது தமிழகம்
முஸ்தாக் அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பீகார் அணியை, தமிழக அணி வீழ்த்தியது.
சூரத்,

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி நேற்று சூரத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பீகார் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த பீகார் அணியை தமிழக பந்து வீச்சாளர்கள் 9 விக்கெட்டுக்கு 131 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். கேப்டன் ஆர்.அஸ்வின், முகமது தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 3 வீரர்கள் ரன்-அவுட் ஆனார்கள்.


அடுத்து களம் இறங்கிய தமிழக அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 132 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 46 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 38 ரன்களும் எடுத்தனர். 2-வது ஆட்டத்தில் ஆடிய தமிழக அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்று இருந்தது.