கிரிக்கெட்

மவுன அஞ்சலி செலுத்தும் போது அமைதியாக இருக்குமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்ட கோலி + "||" + Virat Kohli Asks Vizag Crowd To Stay Quiet During Two-Minute Silence

மவுன அஞ்சலி செலுத்தும் போது அமைதியாக இருக்குமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்ட கோலி

மவுன அஞ்சலி செலுத்தும் போது அமைதியாக இருக்குமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்ட கோலி
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தும்போது சப்தம் போட்ட ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு விராட் கோலி கேட்டுக்கொண்டார்.
விசாகப்பட்டினம்,

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியின்போது விசாகப்பட்டின மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் புல்வாமா தாக்குதலில் இறந்த துணை ராணுவ வீரர்களுக்காக  இரண்டு நிமிடம் அமைதிகாக்குமாறு இந்திய கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டார்.

இரு நாட்டு வீரர்களும் தேசிய கீதம் பாடி முடித்த பின்பு புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த துணை ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மவுன   அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது கேலயின் சில பகுதிகளில் ரசிகர்கள் சப்தம் அதிகமாக இருந்தது. இதைக் கவனித்த கோலி கொஞ்சம் அமைதியாக இருக்குமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்டார். இந்திய வீரர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆடினர்.

இதற்கிடையே, மவுன அஞ்சலி செலுத்தும் போது ரசிகர்கள் சப்தம் எழுப்பியதை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர். தேச பக்தி பற்றி பாடம் எடுக்கும் மக்களால் இரண்டு நிமிடம் கூட அமைதியாக இருக்க முடியவில்லை என விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. விராட்கோலியை வீழ்த்த எங்களிடம் திட்டம் இருக்கிறது - ஆஸ்திரேலிய அணியின் துணைகேப்டன் ஹேசில்வுட் பேட்டி
விராட்கோலியின் விக்கெட்டை வீழ்த்த எங்களிடம் திட்டம் உள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ஹேசில்வுட் கூறினார்.
2. காயம் காரணமாக அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் இருந்து பிரித்வி ஷா நீக்கம்
கணுக்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் பிரித்வி ஷா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கமாட்டார்.