கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி 2-வது இடத்துக்கு முன்னேற்றம் + "||" + Test cricket rankings New Zealand team improved to 2th place

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி 2-வது இடத்துக்கு முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில், நியூசிலாந்து அணி 2-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
துபாய்,

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்றதால் கூடுதலாக 4 புள்ளிகள் பெற்றாலும் அந்த அணியால் தரவரிசையில் முன்னேற்றம் காண முடியவில்லை. இலங்கைக்கு எதிரான தொடரில் தோற்றதால் 5 புள்ளிகளை இழந்த தென்ஆப்பிரிக்க அணி (105 புள்ளிகள்) 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு சரிந்தது. நியூசிலாந்து அணி (107 புள்ளிகள்) 3-வது இடத்தில் இருந்து ஒரு இடம் ஏற்றம் கண்டு 2-வது இடத்துக்கு முன்னேறியது. ஆஸ்திரேலிய அணி (104 புள்ளிகள்) 4-வது இடத்திலும், இங்கிலாந்து அணி (104 புள்ளிகள்) 5-வது இடத்திலும், இலங்கை அணி (93 புள்ளிகள்) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி (88 புள்ளிகள்) 7-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி (77 புள்ளிகள்) 8-வது இடத்திலும், வங்காளதேச அணி (69 புள்ளிகள்) 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி (13 புள்ளிகள்) 10-வது இடத்திலும் தொடருகின்றன.


பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி (922 புள்ளிகள்) முதலிடத்திலும், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (897 புள்ளிகள்) 2-வது இடத்திலும், இந்திய அணி வீரர் புஜாரா (881 புள்ளிகள்) 3-வது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (857 புள்ளிகள்) 4-வது இடத்திலும் மாற்றமின்றி தொடருகின்றனர். நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் (763 புள்ளிகள்) முன்னேற்றம் கண்டு இங்கிலாந்து வீரர் ஜோரூட்டுடன் 5-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.