கிரிக்கெட்

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து + "||" + England-West Indies Match 3rd ODI Canceled by rain

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து

இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து
இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான 3-வது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
செயின்ட் ஜார்ஜ்,

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்ற நிலையில், 3-வது ஒரு நாள் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று முன்தினம் நடக்க இருந்தது. ஆனால் பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் இந்த ஆட்டம் கைவிடப்பட்டது. 4-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த ஆட்டத்திற்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.