கிரிக்கெட்

மாநில இளையோர் 20 ஓவர் கிரிக்கெட்: திருச்சி அணி ‘சாம்பியன்’ + "||" + State young people 20 Over cricket: Trichy team 'champion'

மாநில இளையோர் 20 ஓவர் கிரிக்கெட்: திருச்சி அணி ‘சாம்பியன்’

மாநில இளையோர் 20 ஓவர் கிரிக்கெட்: திருச்சி அணி ‘சாம்பியன்’
மாநில இளையோர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், திருச்சி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
திருச்சி,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாநில இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோருக்கான) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திருச்சி, சேலம், திருநெல்வேலி, கோவை ஆகிய 4 இடங்களில் நடந்து வந்தது. திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் சேலம்-திருச்சி மாவட்ட அணிகள் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த சேலம் மாவட்ட அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி மாவட்ட அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக நவீன் 53 ரன்கள் எடுத்தார். 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சேலம் மாவட்ட அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களே எடுத்தது. இதனால் திருச்சி மாவட்ட அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.