20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் ராகுல், மேக்ஸ்வெல் முன்னேற்றம்


20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் ராகுல், மேக்ஸ்வெல் முன்னேற்றம்
x
தினத்தந்தி 28 Feb 2019 11:00 PM GMT (Updated: 2019-03-01T02:49:17+05:30)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 20 ஓவர் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.

துபாய்,

பேட்டிங் தரவரிசையில் பாபர் அசாம் (பாகிஸ்தான்) முதலிடமும், காலின் முன்ரோ (நியூசிலாந்து) 2-வது இடமும் வகிக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முறையே 56, 113 ரன்கள் வீதம் விளாசி தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் 2 இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இதே தொடரில் 50, 47 ரன்கள் வீதம் எடுத்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 10-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு வந்துள்ளார். இதில் டாப்-10 இடத்திற்குள் உள்ள ஒரே இந்தியர் ராகுல் தான். இந்திய கேப்டன் விராட் கோலி 17-வது இடத்திலும் (2 இடம் உயர்வு), டோனி 56-வது இடத்திலும் (7 இடம் அதிகரிப்பு) உள்ளனர். அயர்லாந்து எதிரான 20 ஓவர் ஆட்டத்தில் 62 பந்துகளில் 162 ரன்கள் சேர்த்து அசத்திய ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் 31 இடங்கள் எகிறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 2 இடங்களில் ரஷித்கான் (ஆப்கானிஸ்தான்), ஷதப் கான் (பாகிஸ்தான்) ஆகியோர் தொடருகிறார்கள். இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 12 இடங்கள் ஏற்றம் கண்டு 15-வது இடத்தை பெற்று இருக்கிறார்.

Next Story