துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 2 March 2019 9:30 PM GMT (Updated: 2 March 2019 7:01 PM GMT)

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நேற்று நடந்தது.


* இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா, உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் யார்-யார் இடம் பெற வேண்டும் என்று தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். உலக கோப்பை போட்டிக்கு அனுபவம் வாய்ந்த டோனி கேப்டனாக இருக்க வேண்டும் என்பது அஜய் ஜடேஜாவின் விருப்பமாகும். தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோருக்கு அவர் அணியில் இடம் வழங்கியுள்ளார்.

* சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் சூரத்தில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழக அணி (பி பிரிவு) தனது கடைசி லீக்கில் மேகாலயாவை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. முரளிவிஜய் சதமும் (107 ரன், 67 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்), வாஷிங்டன் சுந்தர் அரைசதமும் (53 ரன், 37 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். தொடர்ந்து ஆடிய மேகாலயா அணியால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 92 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணி 4-வது வெற்றியை ருசித்தது. ஆனாலும் தமிழக அணி தனது பிரிவில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

* வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 28.1 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அந்த அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். அடுத்து இந்த சிறிய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, கிரிஸ் கெயிலின் 77(27) அதிரடி ஆட்டத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் நடந்த 89-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. புனே சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை தோற்கடித்து ஆறுதல் வெற்றி பெற்றது. இன்று நடக்கும் கடைசி லீக்கில் கொல்கத்தா-டெல்லி அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன.


Next Story