கிரிக்கெட்

அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் லயோலா அணி + "||" + All Indian College Cricket: Loyola team in the final

அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் லயோலா அணி

அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் லயோலா அணி
அகில இந்திய கல்லூரி கிரிக்கெட்டின், இறுதிப்போட்டிக்கு லயோலா அணி தகுதிபெற்றது.
சென்னை,

5-வது பவித்சிங் நாயர் நினைவு கோப்பைக்கான அகில இந்திய கல்லூரி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதியில் லயோலா அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.கே.எம். விவேகானந்தாவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதில் ஆர்.கே.எம். நிர்ணயித்த 151 ரன்கள் இலக்கை லயோலா அணி சஞ்சய் யாதவின் (52 ரன்) அரைசதத்தின் உதவியுடன் 19.4 ஓவர்களில் எட்டியது. மற்றொரு அரைஇறுதியில் குருநானக் ‘ஏ’ அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் குருநானக் ஸ்டார்சை வீழ்த்தியது. இன்று பகல் 12.30 மணிக்கு நடக்கும் இறுதிஆட்டத்தில் லயோலா-குருநானக் ‘ஏ’ அணிகள் மோதுகின்றன. முன்னதாக காலை 8.30 மணிக்கு பெண்கள் பிரிவில் நடக்கும் இறுதிப்போட்டியில் எத்திராஜ்-பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அணிகள் சந்திக்கின்றன.