இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி


இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி
x
தினத்தந்தி 4 March 2019 10:00 PM GMT (Updated: 2019-03-05T03:09:20+05:30)

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தது.

கவுகாத்தி,

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டாமி பிமான்ட் 62 ரன்னும் (57 பந்து, 9 பவுண்டரி), கேப்டன் ஹீதர் நைட் 40 ரன்னும் (20 பந்து, 7 பவுண்டரி) எடுத்தனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்கமே மோசமாக இருந்தது. ஹர்லீன் டியோல் (8), கேப்டன் மந்தனா (2 ரன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (2 ரன்), மிதாலி ராஜ் (7 ரன்) ஆகிய டாப்-4 வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. இதனால் இந்திய அணியால் சரிவில் இருந்து மீள முடியாமல் போய் விட்டது. 20 ஓவர்களில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக தழுவிய 5-வது தோல்வி இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் நடக்கிறது.


Next Story