கிரிக்கெட்

மைதானத்திற்குள் ரசிகருடன் ஓடி பிடித்து விளையாடிய டோனி + "||" + There are only a few who can do things like MS Dhoni does.

மைதானத்திற்குள் ரசிகருடன் ஓடி பிடித்து விளையாடிய டோனி

மைதானத்திற்குள் ரசிகருடன்  ஓடி பிடித்து விளையாடிய டோனி
நாக்பூர் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகருடன் டோனி ஓடி பிடித்து விளையாடிய காட்சிகள் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, 2-வது பாதியில் பந்து வீசுவதற்காக இந்திய அணி களமிறங்கியது. அப்போது மைதானத்திற்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் டோனியை தொட முயன்றார்.

அப்போது ரசிகரின் கையில் சிக்காமல், வீரர்கள் பின்னால் ஒளிந்தும், ஓடி ஆடியும் விளையாட்டு காண்பித்த டோனி, ஒரு கட்டத்தில் ரசிகரை கட்டியணைத்து நெகிழ்ச்சி அடையச் செய்தார்.