கிரிக்கெட்

3-வது ஒருநாள் போட்டி: 32 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி + "||" + India vs Australia third ODI: Australia beat India by 32 runs.

3-வது ஒருநாள் போட்டி: 32 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

3-வது ஒருநாள் போட்டி: 32 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 32 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
ராஞ்சி,

இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் முறையே இந்தியா 6 விக்கெட்கள் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 3–வது ஒரு நாள் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று பகல்–இரவு மோதலாக நடந்தது. இந்தப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.

களத்தில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியா அணியில் கவாஜா 104 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 93 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், ஷமி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆரம்பத்தில் அதிரடி காட்டிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் விக்கெட்டுகளை இழந்ததால் ரன் விகிதம் குறைந்தது.

314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் 1 (10) மற்றும் ரோகித் ஷர்மா 14 (14) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த கோலி நிலைத்து ஆடினார். ஆனால் இடையே வந்த அம்பத்தி ராயுடு 2 (8) ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகினார். பின்னர் வந்த தோனி கோலியுடன் சற்று நேரம் ஜோடி சேர்ந்து விளையாடி, பின்னர் 26 (42) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன் பின்னர் வந்த கேதர் ஜாதவ் 26 (39) ரன்னில் அவுட் ஆகினார். ஆனால், நிலைத்து விளையாடிய கோலி தனி ஒருவனாக சதம் அடித்து ஆஸ்திரேலியாவை மிரள வைத்தார். முடிவில்  இந்திய அணி 48.2 ஓவரில் 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.

இந்திய அணிக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 32 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா அணியில் கும்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஆடம் சாம்பா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 123, விஜய் சங்கர் 32 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 86 பந்துகளில் 14 பவுண்டரிகள் விளாசி தனது 41வது சதத்தை பூர்த்தி செய்தார் விராட் கோலி.

இதையடுத்து, 2-1 என இந்த தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள்: மத்திய அரசு
பாகிஸ்தான் தேசிய தின விழாவில் இந்திய பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
2. வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது: ஐ.எம்.எப்
உலகில் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
3. இந்தியாவை 500 குடும்பங்கள் தான் ஆட்சி செய்கிறது; மக்கள் ஆட்சியா? மன்னர் ஆட்சியா? -உயர்நீதிமன்றம்
அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றன என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
4. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
5. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு அளித்தோம்: சீனா
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.