கிரிக்கெட்

ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டி கட்டணத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு + "||" + Wearing a military hat played Indian cricketers

ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டி கட்டணத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு

ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் போட்டி கட்டணத்தை தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு
காஷ்மீரில் உள்ள புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர்.

ராஞ்சி,

காஷ்மீரில் உள்ள புலவாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது ஒரு நாள் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் அந்த விசே‌ஷ தொப்பியை விக்கெட் கீப்பர் டோனி வழங்கினார். ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிக்கும் டோனியின் யோசனையின் பேரில் இந்த ஆட்டத்தை ராணுவ வீரர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பயன்படுத்திக் கொண்டனர்.

ராணுவ தொப்பி அணிந்து மிடுக்குடன் வலம் வந்த இந்திய கேப்டன் விராட் கோலி, ‘இந்த ஆட்டத்தில் பங்கேற்பதன் மூலம் கிடைக்கும் போட்டி கட்டணத்தை, நாங்கள் தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குகிறோம். இதே போல் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

ஆடும் லெவன் அணியில் இடம் பெறும் ஒவ்வொரு இந்திய வீரர்களுக்கும் போட்டி கட்டணம் ரூ.8 லட்சம் ஆகும். இதே போல் களம் காணாமல் வெளியில் இருக்கும் வீரர்களுக்கு அதில் பாதியாக ரூ.4 லட்சம் ஊதியமாக கிடைக்கும். இந்த தொகை அனைத்தும் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் அறிவித்திருப்பதை, ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வரவேற்றுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ‘பந்துவீச்சில் சதம் அடித்த பவுலர்’ ரஷித்கானை கிண்டல் செய்த ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம்
இங்கிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 9 ஓவர்களில் 11 சிக்சர் உள்பட 110 ரன்களை வாரி வழங்கினார்.
2. எங்களுடன் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்ச முடியாது -பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சொல்கிறது
எங்களுடன் விளையாடுமாறு இந்தியாவிடம் கெஞ்ச முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
3. ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் முகமது அமீர் கன்னத்தில் அறைந்த அப்ரிடி
அப்ரிடி கன்னத்தில் அறைந்த பிறகு தான் முகமது அமீர் ஸ்பாட் பிக்சிங் குறித்து ஒப்புகொண்டார் என் அப்துல் ரசாக் கூறி உள்ளார்.
4. மதுரையில் பரிதாபம்: கிரிக்கெட் ஆடிய வாலிபர் திடீர் சாவு
மதுரையில் கிரிக்கெட் விளையாடிய வாலிபர் திடீரென்று இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5. நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்
போட்டியின் போது நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய டோனிக்கு டுவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.