3–வது ஆட்டத்திலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா


3–வது ஆட்டத்திலும் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா
x
தினத்தந்தி 10 March 2019 10:00 PM GMT (Updated: 10 March 2019 7:13 PM GMT)

இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடந்தது.

டர்பன், 

இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் குவித்தது. தனது 14–வது சதத்தை அடித்த குயின்டான் டி காக் 121 ரன்களும் (108 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்), வான்டெர் டுசென் 50 ரன்களும், டேவிட் மில்லர் 41 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து களம் இறங்கிய இலங்கை அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த்–லீவிஸ் விதிமுறைப்படி இலங்கை அணி 24 ஓவர்களில் 193 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய இலங்கை அணியால் 24 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 121 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் 3–0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4–வது ஆட்டம் நாளை மறுதினம் போர்ட்எலிசபெத்தில் நடக்கிறது.


Next Story