கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி 211 ரன்னில் ஆல்–அவுட் + "||" + Test against New Zealand: All-out in Bangladesh's 211 runs

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி 211 ரன்னில் ஆல்–அவுட்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: வங்காளதேச அணி 211 ரன்னில் ஆல்–அவுட்
நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் கடந்த 8–ந்தேதி தொடங்க இருந்தது.

வெலிங்டன், 

நியூசிலாந்து – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் கடந்த 8–ந்தேதி தொடங்க இருந்தது. முதல் 2 நாட்கள் மழையால் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. 3–வது நாளான நேற்று ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 61 ஓவர்களில் 211 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. அதிகபட்சமாக தமிம் இக்பால் 74 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் நீல் வாக்னெர் 4 விக்கெட்டுகளும், டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. அத்துடன் 3–வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. கேப்டன் வில்லியம்சன் (10 ரன்), ராஸ் டெய்லர் (19 ரன்) களத்தில் உள்ளனர். 4–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.