கிரிக்கெட்

‘இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து விளையாட அனுமதி அளித்தோம்’ - ஐ.சி.சி. விளக்கம் + "||" + "Indian team allowed us to wear an army cap" - ICC Description

‘இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து விளையாட அனுமதி அளித்தோம்’ - ஐ.சி.சி. விளக்கம்

‘இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து விளையாட அனுமதி அளித்தோம்’ - ஐ.சி.சி. விளக்கம்
இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து விளையாட அனுமதி அளிக்கப்பட்டதாக ஐ.சி.சி. விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த 3-வது ஒரு நாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியினர், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களது குடும்பத்துக்கு நிதி திரட்டும் நோக்கிலும் நமது ராணுவ தொப்பியை அணிந்து விளையாடினார்கள். இதற்கு பாகிஸ்தான் அரசு மட்டுமின்றி அந்த நாட்டு கிரிக்கெட் வாரியமும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்ததுடன், இந்திய கிரிக்கெட் அணி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருந்தன.

இந்த நிலையில் ராணுவ தொப்பி அணிந்து விளையாடிய விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து ஐ.சி.சி. பொதுமேலாளர் கிளைர் புர்லாங் விடுத்துள்ள அறிக்கையில், ‘புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்த துணை ராணுவ படை வீரர்களை நினைவு கூறும் வகையிலும், நிதி திரட்டும் நோக்கிலும் ராணுவ தொப்பியை அணிந்து விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.சி.சி.யிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டது’ என்று தெரிக்கப்பட்டுள்ளது.