5வது ஒரு நாள் போட்டி; இந்தியாவுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது


5வது ஒரு நாள் போட்டி; இந்தியாவுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது
x
தினத்தந்தி 13 March 2019 7:45 AM GMT (Updated: 13 March 2019 4:06 PM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவுக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

புதுடெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஐதராபாத், நாக்பூரில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் இந்தியாவும், ராஞ்சி, மொகாலியில் நடந்த அடுத்த இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. 

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது.

ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கவாஜா 100 (106), பின்ச் 27 (43) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.  இதன்பின் ஹேண்ட்ஸ்கோம்ப் அரை சதம் அடித்து (52 ரன்கள்) ஆட்டமிழந்துள்ளார்.  மேக்ஸ்வெல் ஒரு ரன்னுடனும், ஸ்டாய்னிஸ் (20), டர்னர் (20), கேரி (3) ரிச்சர்ட்சன் (29) மற்றும் கும்மின்ஸ் (15) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

லையான் (1) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.  50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.  இதனால் இந்திய அணிக்கு 273 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Next Story