கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம் - குறைந்தபட்ச விலை ரூ.1,300 + "||" + IPL Ticket sales for Chennai starting tomorrow - Minimum price of Rs. 1,300

ஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம் - குறைந்தபட்ச விலை ரூ.1,300

ஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம் - குறைந்தபட்ச விலை ரூ.1,300
ஐ.பி.எல். கிரிக்கெட் டிக்கெட் விற்பனை சென்னையில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. குறைந்தபட்ச விலை ரூ.1,300ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் ஏப்ரல் 5-ந் தேதி வரையிலான முதல் 2 வார காலத்துக்கான அட்டவணை மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் ஐ.பி.எல். முழு அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டம் சென்னையில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

சென்னையில் நடைபெறும் தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்ட்டரில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது. இதேநேரத்தில் www.chennaisuperkings.com மற்றும் in.bookmyshow.com ஆகிய இணைய தளங்களிலும் டிக்கெட் விற்பனை ஆரம்பமாகும். சென்னை போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச விலையிலான டிக்கெட்டுகள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்ட்டரில் மட்டுமே விற்கப்படும். ரூ.2,500, ரூ.5 ஆயிரம், ரூ.6,500 ஆகிய விலைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் மோதும் எஞ்சிய போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல் - சென்னையில் மார்ச் 23-ந் தேதி நடக்கிறது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் அடுத்த மாதம் 23-ந்தேதி சென்னையில் மோதுகின்றன.
2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி அணிக்கு திரும்புகிறார், ஷிகர் தவான்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஷிகர் தவான் 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு திரும்புகிறார்.