கிரிக்கெட்

சையத் முஸ்தாக் கோப்பை கிரிக்கெட்: கர்நாடக அணி ‘சாம்பியன்’ + "||" + Syed Mushtaq Cup Cricket: Karnataka team 'champion'

சையத் முஸ்தாக் கோப்பை கிரிக்கெட்: கர்நாடக அணி ‘சாம்பியன்’

சையத் முஸ்தாக் கோப்பை கிரிக்கெட்: கர்நாடக அணி ‘சாம்பியன்’
சையத் முஸ்தாக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தூர்,

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் கர்நாடகா-மராட்டியம் அணிகள் இந்தூரில் நேற்று சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த மராட்டிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நாசாட் ஷேக் 69 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் இறங்கிய கர்நாடக அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 159 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. கர்நாடக அணியில் ரோகன் கடாம் (60 ரன்), மயங்க் அகர்வால் (85 ரன், 57 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) அரைசதம் விளாசினர்.ஆசிரியரின் தேர்வுகள்...