கிரிக்கெட்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக கங்குலி நியமனம் + "||" + Ganguly appointed as consultant of Delhi Capitals

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக கங்குலி நியமனம்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக கங்குலி நியமனம்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்பட்டு இருப்பதாக அந்த அணி நிர்வாகம் நேற்று அறிவித்தது. இது குறித்து கங்குலி கருத்து தெரிவிக்கையில், ‘டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நிர்வாகத்தில் அங்கம் வகிக்க இருப்பதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியினருடன் இணைந்து பணியாற்ற இருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்’ என்றார். கங்குலி நியமனம் குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சேர்மன் பார்த் ஜிண்டால் அளித்த பேட்டியில், ‘உலக கிரிக்கெட்டில் அதிக மதிநுட்பம் மிக்கவர்களில் ஒருவர் கங்குலி. இந்திய கிரிக்கெட்டில் இன்று காணப்படும் ஆக்ரோஷம் தோன்ற காரணமாக இருந்தவர் கங்குலி எனலாம். அவரது அனுபவத்தின் மூலம் எங்கள் அணி பெரிய ஆதாயம் பெறும் என்பதில் சந்தேகமில்லை’ என்று தெரிவித்தார்.