கிரிக்கெட்

கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு : வங்காளதேசம் - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி ரத்து + "||" + Christchurch Shooting: New Zealand, Bangladesh Third Test Called Off

கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு : வங்காளதேசம் - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி ரத்து

கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு : வங்காளதேசம் - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி ரத்து
கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து வங்காளதேசம் - நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் டீன்ஸ் அவ் பகுதியில் ஹெக்லி பார்க் அருகே மிகப்பெரிய மசூதி இருக்கிறது. இந்த மசூதியில் இன்று அடையாளம் தெரியாத  துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக  ஒரு பெண் உட்பட 4 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் இன்னும் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். 

 டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து  சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணியினர், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த  மசூதிக்கு செல்ல இருந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பி சென்றனர். 

இதற்கிடையே, நியூசிலாந்து - வங்காளதேசம் இடையேயான டெஸ்ட் நாளை நடைபெற இருந்த நிலையில்,  டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.  3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகித்த நிலையில், 3-வது போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. மசூதி தாக்குதல் எதிரொலி: நியூசிலாந்தில் துப்பாக்கி வைத்திருக்க கடும் கட்டுப்பாடு
மசூதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, நியூசிலாந்தில் மக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க மந்திரிசபை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
2. உலகைச்சுற்றி...
நியூசிலாந்தில் இருவேறு மசூதிகளில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.
3. நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு, 5 பேர் இந்தியர்கள்
நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் 5 பேர் இந்தியர்கள் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
4. நியூசிலாந்தில் 49 பேரை கொன்று குவித்த பயங்கரவாதியை, அடுத்த மாதம் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு
நியூசிலாந்தில் 49 பேரை கொன்று குவித்த பயங்கரவாதியை, அடுத்த மாதம் 5-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
5. நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்
நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஆஸ்திரேலிய நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.