விராட்கோலி கேப்டன்சியில் இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும் - கவுதம் கம்பீர்


விராட்கோலி கேப்டன்சியில் இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும் - கவுதம் கம்பீர்
x
தினத்தந்தி 18 March 2019 3:50 PM GMT (Updated: 2019-03-18T21:20:07+05:30)

இந்திய கிரிக்கெட் வீரர் விராட்கோலி கேப்டன்சியில் இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கவுதம் கம்பீர் கூறியிருப்பதாவது:

3 ஐபிஎல் கோப்பைகளை வென்றவர்கள் தோனி மற்றும் ரோஹித் சர்மா இவர்களை ஒப்பிடும்போது கேப்டன்சியில் விராட் கோலி இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும்.

அவர் தலைமையிலான அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆகவே ஐபிஎல் கோப்பையை வெல்லும் வரை அவர் சிறந்த கேப்டனாக முடியாது.

தோனி, ரோஹித் சர்மா 3 முறை ஐபிஎல் கோப்பை வென்ற கேப்டன்கள் ஆவார்கள். ஆனால் கோலி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை, எனவே ரோஹித் சர்மாவுடன், தோனியுடன் கோலியை ஒப்பிட முடியாது, 

கடந்த சில ஆண்டுகளாக ஆர்சிபி கேப்டனாக இருந்தும் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை, ஆர்சிபி இவரைக் கேப்டன்சியிலிருந்து தூக்காமல் வைத்திருப்பது, அவரது அதிர்ஷ்டம் ஆகும். ஆர்சிபி நிர்வாகத்துக்கு அவர் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.

என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.


Next Story