‘இந்த சீசனில் தொடக்க வீரராக ஆடுவேன்’ - மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி


‘இந்த சீசனில் தொடக்க வீரராக ஆடுவேன்’ - மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி
x
தினத்தந்தி 19 March 2019 11:15 PM GMT (Updated: 2019-03-20T01:41:17+05:30)

இந்த சீசனில் தொடக்க வீரராக ஆடுவேன் என மும்பை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

மும்பை,

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா நேற்று அளித்த பேட்டியில், ‘இந்த ஐ.பி.எல். சீசனில் எல்லா ஆட்டங்களிலும் நான் தொடக்க ஆட்டக்காரராகவே ஆடுவேன். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியும் அதற்கு ஒரு காரணம். இந்திய அணியில் நான் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவதால் அதை மனதில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளேன். மும்பை அணி நிர்வாகமும் இதை புரிந்து கொண்டுள்ளது. அத்துடன் மிடில் வரிசையில் விளையாடுவதற்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள்’ என்றார். கடந்த ஆண்டு ஐ.பி.எல்.-ல் ரோகித் சர்மா பெரும்பாலான ஆட்டங்களில் 4-வது வரிசையில் விளையாடியது நினைவு கூரத்தக்கது.

Next Story