நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு மூன்று விருது


நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு மூன்று விருது
x
தினத்தந்தி 21 March 2019 10:30 PM GMT (Updated: 21 March 2019 9:08 PM GMT)

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

ஆக்லாந்து,

இதில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ரிச்சர்ட் ஹாட்லீ விருது மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர், நேர்த்தியான பேட்டிங்குக்குரிய ரெட்பாத் விருது ஆகியவற்றை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தட்டிச் சென்றார். ரிச்சர்ட் ஹாட்லீ விருதை அவர் பெறுவது இது 3-வது முறையாகும். வில்லியம்சனின் தலைமையில் நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக 5 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்தது. அத்துடன் அவரும் மூன்று வடிவிலான போட்டிகளிலும் அபாரமாக ரன் குவித்து வருகிறார். அதற்குரிய அங்கீகாரமாக இந்த விருதுகள் கிடைத்திருக்கிறது.

சிறந்த ஒரு நாள் போட்டி வீரராக ராஸ் டெய்லரும், சிறந்த 20 ஓவர் போட்டி வீரராக காலின் முன்ரோவும் தேர்வு செய்யப்பட்டனர். ஆல்-ரவுண்டர் அமெலியா கெர், நியூசிலாந்தின் சிறந்த வீராங்கனை விருதை தனதாக்கினார்.

Next Story